சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன், ஞானவேல் ராஜா தயாரிப்பில், தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள 'கங்குவா' திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியானது.
சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான இத்திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டதட்ட 11,500 காட்சிகள் வெளியானது. ரூ.2000 கோடி வசூல் அள்ளும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசிய நிலையில், படம் வெளியான நாள் முதலே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றனர்.
இதனால் படம் வெளியான இரண்டு நாட்களில் 89 கோடி மட்டுமே வசூலித்தது. தொழில்நுட்ப ரீதியாக நல்ல படமாக இருந்தாலும் சிவாவின் மோசமான திரைக்கதை படத்தைக் கெடுத்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து நடிகை ஜோதிகா சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: விக்னேஷ் சிவன் ’LIC’ படத் தலைப்பை பயன்படுத்தியது நியாயமா?... நயன்தாராவுக்கு பிரபல இசையமைப்பாளர் பதிலடி!
அதில், "இந்தக் குறிப்பை நான் ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் எழுதுகிறேன், நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல. ‘கங்குவா’ படம் திரையுலகில் ஓர் அதிசயம். சூர்யா, உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஒரு நடிகராக சினிமாவை முன்னோக்கிக் கொண்டு செல்ல நீங்கள் காணும் கனவுகளும், முயற்சிகளும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.
கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். குறை இல்லாத படத்தை யாரும் எடுக்க முடியாது. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த படத்தையும் விமர்சிப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஊடகங்கள் மற்றும் சிலரின் எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
நான் முன்பு பார்த்த பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்றவற்றுக்கு எல்லாம் இந்த அளவுக்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கங்குவாவுக்கு மட்டும் ஏன்?. கங்குவா படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனம் வர ஆரம்பித்துவிட்டது. பல குழுக்கள் இணைந்து திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்களைப் பரப்புகின்றன. விமர்சகர்கள் படத்தில் உள்ள நல்ல விஷயங்களைக் கவனிக்காமல் விட்டது ஏன்? என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்