முதுமலை புலிகள் காப்பகம் கர்நாடகம் - கேரளம் மாநிலங்களை ஒட்டி உள்ளது. மைசூரு - பெங்களூரு செல்லும் பயணிகள் யானைகள் நிறைந்த இந்த வனப்பகுதி வழியே செல்ல வேண்யுள்ளது. தற்போது வனப்பகுதியில் மழை பெய்து பச்சை பசேல் என்று காட்சியளிப்பதால் அதனை மேய்வதற்காக யானைகள் சாலை ஓரத்திலேயே உலா வருகின்றன.
நேற்று முன்தினம் மாலை இரண்டு இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த இளைஞர்களை வழிமறித்த யானை ஒன்று அவர்களை துரத்தியது. பின்னர் சிறிது தூரம் விரட்டிய யானை ஒருகட்டத்தில் நின்றுவிட்டது. பயந்துபோன இளைஞர்கள் அங்கிருந்து வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று தப்பித்தனர்.
அப்போடு எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: அத்துமீறுகிறதா ஆதிப்பெரு உயிர் - ஆக்கிரமிக்கப்படும் யானையின் வலசை பாதைகள்!