ETV Bharat / state

ரஜினி குறித்து கருத்து கூற விரும்பவில்லை - எம்.பி. கனிமொழி! - ரஜினிகாந்த் அரசியல் வருகை

நீலகிரி: தமிழ்நாட்டில் யார் கட்சி தொடங்கினாலும் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என உதகமண்டலத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மகளிரணி செயலாளர் எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

DMK MP Kanimozhi
DMK MP Kanimozhi
author img

By

Published : Dec 4, 2020, 7:44 PM IST

தமிழ்நாட்டில் யார் கட்சி தொடங்கினாலும் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என உதகமண்டலத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.

திமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் விடியலை நோக்கி என்ற பரப்புரை பயணம் மேற்கொள்ளபட்டுவருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்திற்கு திமுக மகளிரணி செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று(டிச.4) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

எம்பி கனிமொழி பிரச்சார பயணம்

இந்நிலையில், ஊட்டியில் அனைத்து தரப்பு மக்களுடன் கலைந்துரையாடலில் ஈடுபட்ட அவர், நீலகிரி மாவட்டத்தின் பிராதன பிரச்னைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றபடும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யபட்டுவிட்டது. தமிழ்நாட்டில் யார் கட்சி தொடங்கினாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது. அதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதேசமயம் ரஜினி இன்னும் அரசியலுக்கே வரவில்லை, கட்சி தொடங்கவில்லை. மேலும் அவரை பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

இதையும் படிங்க: அறவழியில் போராடிவரும் விவசாயிகளுக்குத் தோழமையைத் தெரிவிக்கிறோம் - மம்தா பானர்ஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.