ETV Bharat / state

குன்னூர் சுற்றுலாத் தளங்களில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு! - Nilgiris news

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுலாத் தளங்களில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

குன்னூர் சுற்றுலாத் தளங்களில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

author img

By

Published : May 6, 2023, 11:29 AM IST

நீலகிரி: குன்னூரில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் காட்சி முனையை சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமசந்திரன் ஆய்வு செய்தார். அப்போடு அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம், அமரும் இருக்கைகள் மற்றும் சாலை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் சுற்றுலாத் தளத்திற்கு வரும் சாலை குறித்து தகவல் கேட்டபோது, வனத்துறை அதிகாரி ஒருவர் தவறான தகவலை கூறி உள்ளார். எனவே கோபம் அடைந்த அமைச்சர் அதிகாரியிடம் "விவரம் தெரியாம பேசாதீங்க..” என கடிந்து கொண்டார். இதனிடையே, அருகில் இருந்த அதிகாரிகள் முறையான தகவலை அமைச்சருக்கு கூறினர்.

மேலும், லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் காட்சி முனையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பார்லியார் ஊராட்சி துணைத் தலைவர் தீனதயாளன் செல்வம் உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 'ஆளுநர் 356ஆவது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும்' - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.