ETV Bharat / state

காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம்: உண்மை கண்டறியும் குழு விசாரணை!

மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்தது தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவின் மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு இயக்கக (பிராஜெக்ட் எலிஃபேண்ட்) இணை இயக்குநர் முத்துதமிழ் செல்வன் விசாரணை மேற்கொண்டார்.

உண்மை கண்டறியும் குழு விசாரணை
உண்மை கண்டறியும் குழு விசாரணை
author img

By

Published : Jan 25, 2021, 5:44 AM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில், தங்கும் விடுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த காட்டு யானையை விரட்ட, விடுதி உரிமையாளர்கள், ஊழியர்கள் எரியும் டையரை யானையின் மீது எறிந்தனர். இந்த தீ வைப்பு சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் மல்லனின் மகன் ரேமண்ட் டீன், ஊழியர் பிரசாத் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான ரிக்கி ரயான் என்பவரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், யானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக மசினகுடியில் உண்மை கண்டறியும் குழு விசாரணை மேற்கொண்டது. மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு இயக்ககம் (பிராஜெக்ட் எலிஃபேண்ட்) இணை இயக்குநர் மூத்த விஞ்ஞானி முத்துதமிழ் செல்வன் சம்பவம் நடந்த மாவனல்லா பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் மசினகுடி பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறும் போது, ‘மசினகுடியில் மனித - விலங்கு மோதல்கள் நடந்ததில்லை. இங்குள்ள மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றனர். இத்தகைய சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை. இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால், நடந்த சம்பவம் குறித்த உண்மையை கண்டறிய, மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு இயக்ககம் (பிராஜெக்ட் எலிஃபேண்ட்) இணை இயக்குநர் மூத்த விஞ்ஞானி முத்துதமிழ் செல்வன் மசினகுடி பகுதியில் ஆய்வு செய்தார். அவர் நடந்த சம்பவம் குறித்து மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். அரசுக்கு இது குறித்த அறிக்கையை சமர்பிப்பார்’ என்றார்.

இதற்கிடையில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறியதாக சிங்காரா வனவர் சுரேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: குமரியில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடியின் சகோதரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.