ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு! - நீலகிரிமாவட்ட செய்திகள்

கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

author img

By

Published : Jan 21, 2021, 11:52 PM IST

நீலகிரி: உதகமண்டலத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சிறிது மனநலம் குன்றிய சிறுமி ஒருவரை, சிவப்பிரகாசம் என்ற இளைஞர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கினார்.

இதுகுறித்து உதகை மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், இன்று மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய சிவபிரகாசத்திற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக வழங்க வேண்டும் எனவும் அபராதத்தை கட்டத் தவறும் பட்சத்தில், கூடுதலாக இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: மசினகுடியில் இறந்த யானைக்கு பொதுமக்கள் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.