உதகை நொண்டிமேடு ஒத்தமரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(37), கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை விற்று இளைஞர்கள், மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தார். இவர் மீது போதைப் பொருள்கள் விற்றதாக, பல்வேறு புகார்கள் வந்ததால் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு தொடர் காவலில் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, சிவக்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய நாட்டிற்கு கடத்த இருந்த போதை பொருள்கள் பறிமுதல்