நீலகிரி: உதகை ரோஜா பூங்கா அருகே வசித்து வருபவர் மாண்டி என்னும் மனோஜ் குமார் (42). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தைகள் குறித்த ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாக சில தினங்களுக்கு முன் நீலகிரி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர், உதகை நகர காவல் துறையுடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, பெண் குழந்தைகள் பற்றிய ஆபாச படங்களை பதிவிட்டது மாண்டி என்னும் சந்தோஷ் குமார் தான் என்பது உறுதியானது.
இதனையடுத்து மனோஜ் குமாரை கைது செய்த உதகை நகர காவல் துறையினர் மனோஜ்குமாரின் செல்போனில் வேறு ஏதேனும் குழந்தைகள் பற்றிய ஆபாசப் படங்கள் உள்ளதா? இவர் வேறு யாருக்காவது ஆபாச படங்களை அனுப்பி பதிவேற்றம் செய்துள்ளாரா? அவரின் நண்பர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆளுநரை வரவேற்ற திருச்சி மேயர்