ETV Bharat / state

மிளித்தேன் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு! - காட்டெருமைகளால் நீலகிரி விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்பு

கோத்தகிரி அருகில் உள்ள மிளித்தேன் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடனே, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மிளித்தேன் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

author img

By

Published : Jul 20, 2022, 10:57 PM IST

நீலகிரி: அண்மைக்காலமாக நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக்காணப்படுகிறது. குறிப்பாக காட்டுயானை, காட்டு எருமைகள், காட்டுப்பன்றிகள், கரடிகள், சிறுத்தை, புலி உட்பட அனைத்து வன விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள மிளித்தேன் கிராமத்தில் தாெடர்ந்து முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் தேயிலைத்தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மிளித்தேன் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

அதேபோல், வனங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் காய்கறிகளைப் பயிரிடுவதை விவசாயிகள் முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். எனவே, காட்டெருமைகளால் நீலகிரி விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுவதால் இந்த காட்டு எருமைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 300 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.