நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதியை சுற்றிலும் வனப்பகுதிகள் உள்ளன. இதனால் காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவை ஒட்டிய ஆளுநர் மாளிகை பகுதியில் இரவில் சிறுத்தை ஒன்று புல் மைதானத்தில் அமர்ந்திருப்பதை அந்த பகுதி இளைஞர்கள் பார்த்து படம் பிடித்தனர்.
பின்னர் அந்த சிறுத்தை அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது. இதனால் ஆளுநர் மாளிகை சுற்றியுள்ள அரசு குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சந்தேகத்திற்குரிய வகையில் சிறுத்தைகள் உயிரிழப்பு!