நீலகிரி: குன்னூர் அருகே உள்ள அதிகரட்டி மேலூர் அருகே இடைப்பட்ட இடத்தில் டெரேமியா எஸ்டேட் உள்ளது. இந்தப் பகுதியில் இன்று (ஜூன்.24) சிறுத்தை குட்டி ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த கோவை உதவி வனப்பாதுகாவலர்கள் கிராம் மஞ்சக்கம்பை அருகே அமைந்துள்ள மேல் டெரமியா டீ எஸ்டேட்டில் ஆய்வு செய்தனர். இதில், சுமார் 9 மாதமுடைய பெண் சிறுத்தை குட்டி இறந்துள்ளது தெரிய வந்தது.
பின்னர், தலைகுந்தா கால்நடை மருத்துவ அலுவலர்கள் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறுத்தை குட்டியானது பிற வன உயிரினம் தாக்கி படுகாயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பின்னர், அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.
இதையும் படிங்க: கார் கதவில் கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் கடத்தல்: நான்கு பேர் கைது