நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன. அவை அவ்வப்போது உணவு தேடி தேயிலைத் தோட்டம், குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
இப்படி ஊருக்குள் வரும் காட்டெருமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உள்ளன. எனவே மற்ற இரை தேடும் விலங்குகளான சிறுத்தை, புலி போன்றவற்றிற்கும் காட்டெருமைகள் எளிதான இரையாகிப் போயின.
இந்நிலையில் குன்னூர் அருகே பில்லிமலை அறையட்டி பகுதியில், தனியார் தேயிலைத் தோட்டம் ஒன்றில் ஆறு வயது நிரம்பிய ஒரு பெண் காட்டெருமையும், ஐந்து வயது நிரம்பிய ஒரு ஆண் சிறுத்தையும் ஒரே இடத்தில் உயிரிழந்து கிடந்தன.
அவைகளைக் கண்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, அங்கு சென்ற வனத்துறையினர் இது குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து விலங்குகளின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இதையும் படிங்க:குழியில் காட்டெருமை... வனத்துறை மீட்டும் உயிரிழந்த சோகம்!