நீலகிரி: குன்னூர் பகுதியில் சமீப காலமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. குறிப்பாக கரடி, சிறுத்தை, காட்டு மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு அருகே உணவுத் தேடி வருகின்றன.
இந்நிலையில், குன்னூர் அருகே கேத்தி சாந்தூர் பகுதியில் இரவில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வந்துள்ளது. சிறுத்தை உலா வரும் காட்சி அந்தப் பகுதியில் உள்ள வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும், சிறுத்தையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூரில் மண் சரிவால் விபத்து ஏற்படும் அபாயம்