நீலகிாி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக இரவிலும் பகலிலும் பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மண்சாிவு, நிலச்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக மலை ரயில் செல்லும் பாதையில் ஆங்காங்கே பாறைகள், மரங்கள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னுாா் மலை ரயில் பாதையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி இன்று முதல் 20ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயிலும் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் முதல் ஊட்டி வரை இயங்கும் மலை ரயில் வழக்கம்போல் இயங்கும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய வரலாற்றில் முதல்முறையாக பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடு