ETV Bharat / state

வேகமெடுக்கும் கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு: செல்போன் ஆதாரங்களை ஆய்வுக்கு அனுப்பிய காவல்துறை! - kodanadu murder case adjourned

Kodanad Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் உயிரிழந்த கனகராஜின் செல்போன் உரையாடல்கள் ஆய்வுக்காக குஜராத் அனுப்பப்பட்டுள்ளதால் இது குறித்து விசாரணைக்கு கால அவாசம் கேட்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 5:17 PM IST

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் இதுவரை நடத்திய விசாரணையின் தன்மையை குறித்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் நீதிபதி கேட்டறிந்தார்.

அதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் கூடுதல் சாட்சிகள் இடையே விசாரணை நடத்த நீதிபதியிடம் கூடுதல் கால அகவாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதனால், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, வழக்கை எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட சேலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜன் வழக்கினை சிபிசிஐடி அதிகாரிகள் தனி குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உயிரிழந்த கனகராஜன் செல்போன் விவரங்களை நீதிமன்றத்தின் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி மற்றும் ஜூலை 24ஆம் தேதி கோவை மற்றும் குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதை நீதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

செல்போன் டவர்களில் பெறப்பட்ட 60 உரையாடல்கள் குஜராத்தில் உள்ள காந்திநகர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அதில் பதிவாகியுள்ள உரையாடல்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் முழு விசாரணை அறிக்கை வரவேண்டும் என்பதால் கால அவகாசம் கேட்டோம். இதனைத் தொடர்ந்து நீதிபதி வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் 19 எம்பிபிஎஸ் இடங்கள் காலி.. ஈடிவி பாரத் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.