ETV Bharat / state

கொடநாடு வழக்கு; கைப்பற்றப்பட்ட செல்போன்கள் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு! - kodanad jayalalitha estate

கொடநாடு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட வரைபடங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என சிபிசிஐடி கோரிய நிலையில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

kodanadu case
கொடநாடு வழக்கு
author img

By

Published : Jul 12, 2023, 10:19 PM IST

நீலகிரி: கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி.முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறு விசாரணை துவங்கியது.

இதனைத்தொடர்ந்து மேலும், 316 சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொடநாடு கொலை வழக்கு ஆரம்பத்தில் நீதிபதி வடமலை விசாரித்தார். அதன்பிறகு சஞ்சய் பாபா, நீதிபதி நாராயணன், கடைசியாக நீதிபதி முருகன் ஆகியோர் விசாரித்தனர். இந்த நிலையில் தற்போது நீதிபதி அப்துல் காதர் இந்த கொடநாடு வழக்கை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 10) சிபிசிஐடி உதவி துணைக் காவல் கண்காணிப்பாளார் முருகவேல் தலைமையிலான போலீசார் கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்று கொலை நடந்த இடம், கொள்ளை போன பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நட்ராஜ், முக்கிய சாட்சியான முனிராஜ் ஆகியோரை விசாரித்தனர். அதன்பிறகு கொடநாடு எஸ்டேட்டின் வரைபடம், போட்டோ, ஸ்டோர் ரூம், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தங்கிய அறைகளில் கைப்பற்றபட்ட பொருட்கள், ஓட்டுநர் கனகராஜ் உட்பட பலரின் செல்போன்கள் அனைத்தையும் ஹைதராபாத் நகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

விறுவிறுப்பான கொடநாடு வழக்கு விசாரணை; இடைக்கால அறிக்கை: இதற்காக கைப்பற்றபட்ட பொருட்கள் என்னென்ன? என்று நீதிபதி அப்துல் காதரிடம் ஒரு மனு தாக்கல் செய்து தெரியப்படுத்தியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கின் எந்த பொருட்களும் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சிபிசிஐடி போலீசார் கைப்பற்றபட்ட முக்கிய பொருட்களை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு வழக்கு முக்கிய கட்டத்துக்கு எட்டியுள்ளதை காட்டுகிறது. இதை தவிர வரும் 28ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் இதுவரை நடந்த விசாரணை குறித்து இடைக்கால அறிக்கை சமர்பிக்க உள்ளனர்.

இதனையடுத்து அங்கு கைப்பற்றப்பட்ட வரைபடங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்கு அனுப்ப சிபிசிஐடிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தல்.. கும்பல் தப்பியோடிய காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.