'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தேர்தல் பரப்புரைக்காக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர் 4) திமுக மகளிரணி மாநிலச் செயலாளரும் தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி வருகை தந்திருந்தார்.
முன்னதாக, குன்னூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மக்களிடையே தேர்தல் பரப்புரை ஆற்றினார். அதன்பின்னர், அங்கிருந்து மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், ரங்கநாதன் வீட்டிற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிகாந்த் ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என திமுகவை தான் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறிய நிலையில் இதுகுறித்து கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்து கருத்தை எதிர்நோக்கினர். "ரஜினி, இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வராத ஒருவர் பற்றிக் கருத்துக்கூற விரும்பவில்லை' என்று கனிமொழி தெரிவித்தார்.