நீலகிரி: மாவட்டம் கூடலூர் அருகே அம்பலமூலா காவல் நிலையத்தில் காவலர் ராஜேஷ் கண்ணன் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை ஒரு வழக்கு சம்பந்தமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது கண்ணன்
மாவட்ட நீதிபதி முருகனுக்கு மரியாதை செலுத்த நீதிபதியை சந்தித்தார்.
அப்போது நீதிபதி முருகன் காவலர் ராஜேஸ் கண்ணனை பார்த்துள்ளார். அவர் சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா வைத்திருக்கும் மீசை போல் பெரிதாக வைத்துள்ளதைப் பார்த்ததும் உடனடியாக மீசையை ஒழுக்கமான முறையில் சரி செய்து தன்னிடம் காட்டும்படி உத்தரவிட்டார்.
மேலும் காவலர் பணிக்குச் சேரும் பொழுது உள்ள அடையாளங்கள் இருக்க வேண்டும் எனவும் அடையாளங்களை மாற்ற வேண்டுமென்றால் காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவோடு அடையாளங்களை மாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறினார். இதனையடுத்து காவலர் ராஜேஷ் கண்ணன் தனது மீசையை முறையாக வெட்டி சரிசெய்து மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்து விசாரணைக்கு ஆஜரானார். இதனால், நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வாடிய ரோஜா மாலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்