நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாலையின் இருபுறத்திலும் பூக்கள் நிறைந்த மலர்கள் வளர்க்கப்பட்டன. அப்போது தொடங்கிய பழக்கத்தை தற்போது வரை இக்கிராம மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
இதில் ஜெகரண்டா, மே பிளவர், ஸ்பெக்தொடியா போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கோடைக் காலத்தில் குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும், நிலப் போர்வை போர்த்தியது போல் ஜெகரண்டா பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.
இதனை நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆசையோடு, பார்த்து மகிழ்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.