ETV Bharat / state

காக்கைகளிடமிருந்து மீட்கப்பட்ட தேன் பருந்து! - nilgiris district latest news

குன்னூரில் காக்கைகளிடம் சிக்கிக்கொண்ட தேன் பருந்தை மீட்டு வனத் துறையினர் அதனை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Injured hawk
Injured hawk
author img

By

Published : Dec 15, 2020, 12:24 PM IST

நீலகிரி: குன்னூர் நகரின் மையப்பகுதியில் காக்கை கூட்டம் ஒன்று பருந்து ஒன்றினை விரட்டி தாக்கியுள்ளது. அதனைக் கண்ட தீயணைப்புத் துறையினர் காக்கைகளிடமிருந்து தேன் பருந்தை மீட்க வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர் வனத் துறையினர் அந்தத் தேன் பருந்தை மீட்டு உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்று விடுவித்தனர்.

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அரிய வகையான பறவையினங்கள், விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. அவை அவ்வப்போது வழித்தவறி குடியிருப்பு பகுதி, நகர் பகுதிக்குள் வந்து விடுவதால் அவற்றை நாய், காக்கைகள் விரட்டிச் செல்கின்றன.

மீட்கப்பட்ட பருந்து

இதையும் படிங்க: 'சாமி' என்று சொன்னதும் திரும்பிச் செல்லும் காட்டு யானை: வைரலாகும் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.