நீலகிரி: குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில், பயிற்சி அலுவலர்களிடையே ‘இந்தியாவில் சிவில் ராணுவ உறவுகள்’ என்ற தலைப்பில் அருணாச்சல பிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா உரையாற்றினார். அப்போது பேசிய ஆளுநர் பி.டி.மிஸ்ரா,“நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் சிவில் ராணுவ உறவுகள் முக்கியமானது. இது நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, மக்களின் நலன்களைப் பாதுகாக்கிறது.
இந்திய பாதுகாப்பு படை உலகில் சிறந்த பாதுகாப்பு படையாகத் திகழ்வதோடு, பாதுகாப்பு படையினர் தயார் நிலை பாராட்டப்பட்டு வருகிறது” என்றார். இந்த நிகழ்ச்சியில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ராணுவ சாலையில் நடமாடிய காட்டெருமை; அடர்வனத்தில் விட மக்கள் கோரிக்கை