குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நீலகிரி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக உதகை ஏ.டி.சி பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசுகையில், 'இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாட்டை ஆளும் எடப்பாடி அரசு ஆதரவளித்துள்ளது. இதனால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும். அதிமுக மற்றும் பாமக எம்.பி.க்கள் என 12 பேர் அந்த சட்டத்திற்கு ஆதரவாக மாநிலங்களவையில் வாக்களித்தனர். அவர்களை தமிழ்நாட்டிற்கு வர விட்டதே தவறு. அவர்களின் வீடுகளை முற்றுகையிட்டிருக்க வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’உள்ளாட்சித் தேர்தலை நடைபிணமாக்கியவர் இந்த அமைச்சர்தான்’ - சண்முகசுந்தரம் எம்பி காட்டம்