நீலகிரி மாவட்டத்தில் பிப்.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, குன்னூர் நகராட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
அதன்படி, திமுகவினர் 22 வார்டுகளிலும், அதிமுகவினர் 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 மற்றும் சுயேச்சை வேட்பாளர் 1 வார்டு பகுதிகளிலும் என்று வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இன்று (மார்ச் 2) நகராட்சி அலுவலகத்தில் பதவிப்பிராமாணம் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அனைத்து வார்டு உறுப்பினர்களும் உறுதிமொழி கூறி, பதவியேற்றுக் கொண்டனர். இதில் 24ஆவது வார்டு உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த சித்ரா, இதுவே 'தனது முதல் வெற்றி' என்று உறுதிமொழி ஏற்கும் போது உணர்ச்சிவசத்துடன் கண்ணீர் மல்க பதவி ஏற்றுக் கொண்டார். இது அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழச் செய்தது.
இதையும் படிங்க: 'மத்திய அரசுக்கு ஸ்டாலின் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தமிழ்நாடு மாணவர்கள் உக்ரைனில் இருந்து வருகிறார்கள்'