நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதமாக காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது பேருந்து, வாகனங்களை யானைகள் வழிமறிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மஞ்சூரிலிருந்து கோவைக்கு 38 பயணிகளுடன் அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கெத்தைமலை பாதையில் பேருந்து செல்லும்போது காட்டுயானைகள் கூட்டமாக வழிமறித்தது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். பேருந்தை ஒட்டுநர் சற்று தொலைவிலேயே நிறுத்தினார். சுமார் 15 நிமிடம் சாலையில் நின்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதியடைந்தனர்.
தற்போது மூன்றாம் மாற்றுப்பாதைக்கு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. காட்டுயானைகளின் நடமாட்டத்தால் விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... மண்ணை உண்டு வாழும் அதிசயப் பாட்டி!