ETV Bharat / state

கனமழையால் நீலகிரியில் அணைகள் திறப்பு! - அணைகள் திறப்பு

நீலகிரி: ஐந்தாவது நாளாக பெய்து வரும் கனமழையால் பாதுகாப்பு கருதி குந்தா, கிளன்மார்கன் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

heavy rains
author img

By

Published : Aug 8, 2019, 9:59 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் மழை இடைவிடாமல் கொட்டியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுலும் பாதிக்கப்பட்டது. மழைநீர் வெள்ளம் சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால், பல குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு செல்வது என செய்வதிறியாமல் உள்ளனர்.

கொட்டி வரும் மழையினால் பாலாடா, முத்தோரை, காக்காதோப்பு, இத்தலார், பேலிதளா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டிருந்த மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு ஆகியவை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் தொடர் மழையினால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருகளுககு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உதகை–மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதே போல கனமழை பெய்து வரும் நிலையில் உதகையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாதுகாப்பு கருதி குந்தா, கிளன்மார்கன் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கனமழையால் நீலகிரியில் அணைகள் திறப்பு!

Intro:OotyBody:
உதகை                        08-08-19
நீலகிரியில் பெய்து வரும் கனமழை. 1000ற்கும் மேற்பட்ட ஏக்கர் மலைகாய்கறி நீரில் மூழ்கின. 50ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிப்பு.
         நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் மழை இடைவிடாமல் தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரானது சாலைகளில் ஆறுபோல காட்சியளிப்பதுடன் பல குடியிறுப்பு பகுதிகளுக்குள் சென்றுள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு செல்வது என செய்வதிறியாமல் உள்ளது. கொட்டி வரும் மழையினால் பாலாடா, முத்தோரை, காக்காதோப்பு, இத்தலார், பேலிதளா உள்ளிட்ட பகுதிகளில் 1000ற்கும் மேற்பட்ட ஏக்கரில்  பயிரிட்டிருந்த மலைகாய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைகிழங்கு ஆகியவை நீரில் மூழ்கின. மலைகாய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் தொடர் மழையினால் 50ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உதகை – மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான தலைகுந்தா பகுதியில் உள்ள பாலத்தின் மேல் வெள்ளநீர் ஆற்பரித்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல கனமழை பெய்து வரும் நிலையில் உதகையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாhவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாதுகாப்பு கருதி குந்தா மற்றும் கிளன்மார்கன் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பேட்டி : ராஜசேகர் - உதகை Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.