நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் பசுமை குடில்கள் அமைத்து ஜெர்பரா, கார்னேஷன், லில்லியம் உள்ளிட்ட கொய்மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர். இந்த மலர்கள் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பினால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மலர்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர்.
இதன் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான மலர்கள் விற்பனைக்கு கொண்டுசெல்லப்படாமலேயே வீணாகின்றன என வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் ஊரடங்கால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா: பாதிப்பிற்குள்ளான மலர் விவசாயிகள்