நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் ஓட்டுபட்டறை வசம்பள்ளம் அருகே உள்ள குப்பைக்குழியில் கொட்டப்பட்டுவருகிறது. இதனால், அந்த சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் துர்நாற்றம் வீசிகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் உடல் நிலையும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் அந்த கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் நகராட்சியுடன் இணைந்து கிளீன் குன்னூர் தன்னார்வ அமைப்பினர், இங்கு குப்பைகளை அகற்றி, குப்பை கூளம் மேலாண்மை பூங்காவாக மாற்றியுள்ளனர்.
பல்வேறு வகையான மலர் நாற்றுக்களை நடவு செய்து பராமரித்துவருகின்றனர். தற்போது பூக்கள் பூத்து வருவதால் குப்பை கூளம் பகுதிகள் பசுமையுடன் காட்சி அளிக்கிறது. இதனால் மலர்களின் மணங்கள் மக்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது எனலாம்.
இதையும் படிங்க...கரோனா: அதிக பாதிப்புக்குள்ளான ஐந்து மாநிலங்கள்