மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இதன்தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் சுமார் 450 லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால், இந்த நிலையில் குன்னுாரிலிருந்து தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் சுமார் 2 கோடி அளவிலான தேயிலைத் துாள்கள் அனைத்தும் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.
மேலும், அறுவடை செய்யப்பட்ட மலைத்தோட்ட காய்கறிளும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
முடங்கியது டெல்லி - புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து இன்று வேலைநிறுத்தம்!