நீலகிரி: உதகை அருகே உள்ள மாயார் நீர் மின்நிலையத்தில் இணை செயற்பொறியாளராக பணியாற்றுபவர் அலி ரகுமான். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊரான சத்தூருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைபடுத்தி கொண்டு அங்கேயே தங்கியுள்ளார்.
இந்த நிலையில் உதகையில் இருந்த அலி ரகுமானின் மனைவிக்கு நேற்று (ஜூன் 8) திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தங்களது மகளை சாத்தூருக்கு அழைத்து செல்வதற்காக அலி ரகுமானின் மாமனார் பசீர் அகமது, மாமியார் பீமா ஜான் ஆகியோர் காரில் உதகை வந்தனர்.
பின்னர் கல்லட்டி மலைபாதை வழியாக மாயார் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரானது 22-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது அதன் காட்டுபாட்டை இழந்து 23ஆவது கொண்டை ஊசி வளைவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஓட்டுனர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் பசீர் அகமது, மாமியார் பீமா ஜான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரின் அடியில் கணவன் மனைவி இருவரின் உடல்கள் சிக்கி கொண்டதால் உதகையிலிருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கபட்டனர்.
பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின் உடல்கள் மீட்கபட்டன. இது குறித்து புதுமந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டிலிருந்த கணவன் மனைவி கழுத்தறுத்து கொலை - போலீஸ் விசாரணை