நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்மழை பெய்துவந்தது. மேலும் கடும் மேகமூட்டத்துடன், கடுங்குளிரும் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக குன்னூர் வெலிங்டன் பகுதியான மசூதி தெரு, போகி தெரு பகுதிகளில் இரண்டு வீடுகளும், உபதலை பகுதியில் ஒரு வீடும் இடிந்தன.
இதில் மசூதி தெருவில், வீட்டிலிருந்த ராஜேந்திரன், அவரது தாயார் ஆகிய இரண்டு பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தொடர் மழையின் காரணமாக வீடுகள் இடிந்தது, குறித்து கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலையடுத்து விரைந்துவந்த கன்டோன்மென்ட் ஊழியர்கள் இடிந்து விழுந்த சுவரின் கற்களை அப்புறப்படுத்தினர். மேலும் குன்னூர் வட்டாட்சியர் மழையால் இடிந்த வீடுகளுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஆ. ராசாவின் கை வெட்டப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு