நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை தொழில் சார்ந்தோர் சந்திக்கும் சவாகள் குறித்த விவாதம் நிகழ்வு நேற்று (ஜூன் 6) அன்று நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதில் சிறு குறு தேயிலை விவசாயிகள் பெரும்பாலும் பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் கிலோவிற்கு ரூபாய் 30 நிர்ணயிக்க வேண்டும் எனவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கா.ராமச்சந்திரன், "பச்சை தேயிலைக்கு விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூபாய் 30 கொடுத்தல் மட்டுமே பயன் அடைவார்கள், ஆனால் தற்போது இருக்கும் நிலையில் தேயிலைத்துாள் ரூபாய் 165-க்கு விற்பனை செய்தால் மட்டுமே பச்சை தேயிலை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூபாய் 30 வழங்க முடியும்" என்றார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை
தொடர்ந்து பேசிய அவர், "தற்சமயம் தேயிலைத்துாள் கிலோவிற்கு ரூபாய் 80 முதல் 90க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதானல் விவசாயிகளுக்கு எந்த பயனும் சேர்வதில்லை என கூறினார். அதனால் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித் மற்றும் தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துகுமார் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு படிப்படியாக முயற்சி செய்து தேயிலைத்துாள் கிலோவிற்கு ரூபாய் 100, 120 என்று உயர்த்தி விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க உள்ளோம்” என்று கூறினார்.
மேலும், கலப்படத் தேயிலைத்தூள் பற்றி யாரும் தகவல் தெரிவிப்பது இல்லை என்றும், கலப்படத் தேயிலைத் தூள்
பற்றி தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அனைத்து சுற்றுலா தளங்களிலும் நீலகிரி தேயிலைத் தூள் விற்பனை செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரீத்,தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்து குமார், இன்கோ சர்வ் மேலான்மை இயக்குநர் மோனிகா ரானா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழகத்தின் வளர்ச்சி மாநிலத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவருக்கு புரியவில்லை - ஆளுநரை சாடிய முதலமைச்சர்