நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, முள்ளம்பன்றி உள்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரிய குடியிருப்புப் பகுதிகளில் இன்று அதிகாலை (ஏப். 7) கண்டோன்மெண்ட் வாரிய குடியிருப்புக்குள் முள்ளம்பன்றி ஒன்று புகுந்தது. இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள் முடங்கினர்.
இதையடுத்து, குன்னூர் வனத்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அங்கிருந்து முள்ளம்பன்றியை, அடர்ந்த வனப்பகுதிக்குள் வன அலுவலர்கள் விரட்டினர்.
இதையும் படிங்க: 'நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!'