நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும். கடந்த ஆண்டில் பெய்த தொடர் கனமழையால் பனிப்பொழிவு ஆண்டு இறுதி வரை பெய்யாமல் இருந்து வந்தது. மாவட்டத்தில் கடும் பனி பொழிவு நிலவிவருகிறது.
இதனால், அதிகாலை வேளையில் கடும் குளிர் நிலவிவருகிறது. வெள்ளை கம்பளம் விரித்தது போல் காணப்படும் பனிப்பொழிவை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் பனிப்பொழிவில் விளையாடியும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன. தற்போது குன்னூர் பகுதி குட்டி காஷ்மீராக மாறி வருவது என சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: Pongal celebrations: 65 ஆண்டுகள் கடந்தும் சமத்துவப் பொங்கல்!