ETV Bharat / state

உதகையில் கன மழை: சாலையில் மரங்கள் சரிவு! - Heavy rain in Udagai

நீலகிரி: உதகையில் நேற்று (ஆகஸ்ட் 4) இரவு பெய்த கனமழை காரணமாக சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையில் மரங்கள் சரிவு
சாலையில் மரங்கள் சரிவு
author img

By

Published : Aug 5, 2020, 4:43 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் உதகை, கூடலூர் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளன.

இதனால் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராம புற சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உதகை அரசு மருத்துவமனையின் கரோனா ஐசோ லேசன் வார்டு மீது மரம் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக கரோனா நோயாளிகள் உயிர் தப்பினர்.

சாலையில் விழுந்து கிடந்த மரம்

இந்த கனமழையின் காரணமாக சாலைகளில் மண் சரிவு ஏற்படுவதோடு, 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 390 மி.மீட்டர் மழையும், அப்பர் பவானி பகுதியில் 306 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

இதையும் படிங்க: கோவையில் பலத்த மழை: வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.