நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர்ந்து 2 மணி நேரமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மழை நீரை வெளியேற்றும்படி மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழை
அதிக மழை பெய்வதில் தேவாலா பகுதி, மாநிலத்தில் இரண்டாவது இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்: கரோனாவுக்குப் பின் பேரிடி!