ETV Bharat / state

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்: மாடியில் தஞ்சமடைந்த மக்கள்! - குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பழைய அருவங்காடு பகுதியில் குடியிருப்புகள் சேதமடைந்து , பொதுமக்கள் மாடியில் தஞ்சமடைந்தனர்.

heavy Rain house damage
heavy Rain house damage
author img

By

Published : Apr 11, 2020, 12:40 PM IST

Updated : Apr 11, 2020, 3:21 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், குன்னூர் அருகேயுள்ள பழைய அருவங்காடு பகுதியில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து 3 வீடுகள் சேதமடைந்தன.

ராஜன் என்பவரது வீட்டில் வெள்ள நீர் புகுந்ததால், வாஷிங் மிஷின், தொலைக்காட்சி போன்ற மின்சாதனப் பொருள்களும் சேதமடைந்தன. மேலும் வெள்ள நீர் வீட்டினுள் சூழ்ந்ததால், ஐந்து பேர் கொண்ட அக்குடும்பத்தினர் அனைவரும் மாடியில் தஞ்சமடைந்தனர். இதைப்போல, சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள கடைகள், விவசாய நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்தது.

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்

முறையாக, கழிவுநீர் கால்வாயை பராமரிக்காமல் இருந்ததே, இந்த திடீர் வெள்ளப் பெருக்குக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க: கோழிப் பண்ணைகளை காக்க நடவடிக்கை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Last Updated : Apr 11, 2020, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.