ETV Bharat / state

பணி செய்யவிடாமல் தகாத வார்த்தையில் பேசியவர் மீது நவடிக்கை எடுக்க ஆஷா ஊழியர்கள் கோரிக்கை! - coonoor asha workers

நீலகிரி: வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டச் சென்ற ஆஷா பணியாளர்களை பணிசெய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆஷா ஊழியர்கள் கோரிக்கை!
ஆஷா ஊழியர்கள் கோரிக்கை!
author img

By

Published : Aug 25, 2020, 6:22 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இவர்கள் கரோனா நெருக்கடியிலும், பஸ் வசதி இல்லாத நேரத்தில் பல கி.மீ., தொலைவில் இருந்து நடந்தே வந்து பணி செய்கின்றனர்.

இந்நிலையில் எடப்பள்ளி அருகே வெளியூர் சென்று வந்த நபரின் வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்ட ஆஷா பணியாளர்கள் சென்றுள்ளனர்.

அப்போது, அந்நபர் எவ்வித முகாந்திரமும் இன்றி தகாத வார்த்தைகளைக் கூறி அவர்களைத் திட்டியுள்ளார்.

ஆஷா ஊழியர்கள் கோரிக்கை!

கரோனா பரவலைத் தடுக்கும் பணியில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றும் ஆஷா ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

இதையடுத்து, வெலிங்டன் காவல் நிலையத்தில் அவர் மீது ஆஷா ஊழியர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறுதி அளித்ததால் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:ஊதிய உயர்வு கோரி 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் ஆஷா ஊழியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.