ETV Bharat / state

இது ஆரம்பம்தான்; சுமை தூக்கும் வேலைக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள்! - graduates come to lift load in nilgiris

நீலகிரி: கரோனா தொற்றால் நாடே முடங்கியிருக்க வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள பட்டதாரி இளைஞர்கள் பலர் சுமை தூக்கும் வேலை செய்யத் தொடங்கியுள்ளது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

graduates come to lift load in nilgiris
graduates come to lift load in nilgiris
author img

By

Published : Jul 3, 2020, 10:40 AM IST

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு போன்றவற்றை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

குறிப்பாக நீலகிரியின் தங்கம் என விவசாயிகள் அன்போடு அழைக்கும் கேரட்டை பெரும்பாலும் அதிக பரப்பளவில் பயரிட்டுள்ளனர்.‌ இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

graduates come to lift load in nilgiris
சுமை தூக்கும் பட்டதாரி இளைஞர்கள்

அது மட்டுமின்றி வெளி மாநிலங்களான பெங்களூரு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக பல்வேறு இடங்களில் இளைஞர்கள் வேலை இழந்து தற்போது கேரட் சுமை தூக்கும் கூலி வேலை செய்ய தொடங்கியுள்ளனர். தினசரி சுமை தூக்கும் ஆண்களுக்கு 800 ரூபாய், பெண்களுக்கு 400 ரூபாய் கூலி வழங்கப்பட்டுகிறது.

எனவே கல்லூரி இறுதி ஆண்டு படித்து வந்த இளைஞர்கள், பொறியியல் படித்த மாணவர்கள் தற்போது கூலி வேலை செய்ய தொடங்கியுள்ளனர். தங்களது வாழ்வாதாரத்தை நடத்த இதை தவிர வேறு வழி இல்லை எனவும் கவலையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க... கரோனா பாதிப்பு: கேரட் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.