நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் சிக்கன் மூலமாக பரவுவதாக சமூக வலைதலங்களில் தகவல்பரவியது.
இதையடுத்து பொதுமக்கள் கோழிகளை வாங்குவதை குறைத்துள்ளனர். இதனால் கோழியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதிலிருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குன்னூர் வி.பி. தெருவில் கோழிக்கடை வியாபாரிகள் 100 கிலோ சில்லி சிக்கனை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுத்தனர்.
கரோனா, பறவைக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் சிக்கன் உண்பதால் வராது என்று இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இலவச சிக்கனை ஏராளமான பொதுமக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கிச்சென்றனர்.
இதையும் படிங்க... பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை கடும் வீழ்ச்சி!