ETV Bharat / state

தொழிலாளியை தாக்கிய புலியை கூண்டு வைத்துப் பிடிக்கும் பணி தீவிரம்! - forest officers fitting cameras in trees

தேவர்சோலை பகுதியில் தோட்ட தொழிலாளியை தாக்கிய புலியை கூண்டு வைத்துப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புலியை கூண்டு வைத்துப் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரம்

author img

By

Published : Sep 26, 2021, 8:16 PM IST

நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் நேற்று முன்தினம் (செப்.24) மாடு மேய்த்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி சந்திரனை, புலி தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி தொழிலாளர்கள், பொதுமக்கள் தேவர்சோலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து இரண்டு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.

தேவன் எஸ்டேட் பகுதியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில் 100 வனத்துறையினர் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்பது இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. டிரோன் கேமிரா மூலமும், மரங்களின் மீது பரண் அமைத்தும் புலியின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

மாட்டை தாக்கிய புலி

இந்த நிலையில் இன்று (செப்.26) மதியம் புலி சந்திரனை தாக்கிய தேவன் எஸ்டேட் பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மாடு ஒன்றை தாக்கியுள்ளது. புலி அப்பகுதிக்கு மீண்டும் வரும் என்று கணித்து அங்கு பரண் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன், ராஜேஷ்குமார் குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

புலி நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் கான்கிரீட் தளம் சரிந்து விபத்து - தமிழர்கள் இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.