நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம், வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த பகுதிகளுக்கு மிக அருகாமையில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.
இந்த விடுதிகளுக்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தீபாவளி பண்டிகையின் போதும் சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும் எனும் நிலையில் இங்கு வருபவர்கள் பட்டாசு வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே முதுமலை, மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம், சிறியூர், தெங்குமரஹாடா உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து அதிக ஒலி எழூப்பி கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கபட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளுக்கோ, வனப்பகுதிக்கோ, சுற்றுசூழல்களுக்கோ தீங்கு விளைவிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விபத்தில்லா தீபாவளி எல்லையில்லா மகிழ்ச்சி -பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்...