ETV Bharat / state

20 அடி ஆழம்கொண்ட கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை மீட்பு - nilagiri news

நீலகிரி: குன்னூர் நகர குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

நீலகிரி செய்திகள் குன்னூர் செய்திகள் கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை nilagiri news coonoor news
கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை
author img

By

Published : Jun 16, 2020, 4:05 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த வனங்கள் சூழ்ந்துள்ளன. இங்குள்ள வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு படை எடுத்து வருகின்றன. இந்நிலையில், குன்னூர் நகர ஆப்பிள் பி பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் 10 வயதுடைய ஆண் காட்டெருமை ஒன்று விழுந்தது.

20 அடி ஆழம்கொண்ட கிணற்றில் சிக்கிக்கொண்ட காட்டெருமை குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், பொக்லைன் இயந்திர உதவியுடன் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின்பு காட்டெருமையை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

இதையும் படிங்க: காவல் துறை, வணிகச்சங்கம் இணைந்து நடைமுறைக்கு வந்த ஊரடங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.