ETV Bharat / state

அச்சுறுத்தும் புலி... மக்கள் கிலி...! - உயிருடன் பிடிக்கும் முனைப்பில் வனத் துறை! - புலியை தேடும் பணி தீவிரம்

நீலகிரி: பந்திப்பூர் பகுதியில் புலி தாக்கி இருவர் இறந்த நிலையில், அப்பகுதியில் மூன்று புலிகளின் நடமாட்டம் இருப்பதால் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் புலி எது என்பது குறித்து அடையாளம் காணும் பணிகளில் கர்நாடக வனத் துறை ஈடுபட்டுள்ளது.

புலியை தேடும் பணி தீவிரம்
author img

By

Published : Oct 11, 2019, 10:58 AM IST

நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், பந்திப்பூர் புலிகள் காப்பகம் அடங்கிய பகுதியில், இம்மாதம் 7ஆம் தேதி காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிவலிங்கப்பா (55) என்பர் புலி தாக்கி உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தப் புலி மூன்று மாடுகளையும் செப்டம்பர் மாதத்தில் இதே பகுதியைச் சேர்ந்த சிவமாதய்யாவை தாக்கிக் கொன்றுள்ளது.

எனவே பொதுமக்களை அச்சுறுத்திவரும் புலியைப் பிடிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மனிதர்கள், கால்நடைகளை கொன்றுவரும் புலியை, 48 மணி நேரத்திற்குள் உயிருடனோ அல்லது சுட்டுப் பிடிக்கவோ உத்தரவிடப்பட்டு கர்நாடக வனத் துறை களத்தில் இறங்கியது.

புலியைத் தேடும் பணி தீவிரம்

இதனையடுத்து புலியைச் சுட்டுக் கொல்ல எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட புலியைச் சுட்டுக் கொல்லும் முடிவிலிருந்து பின்வாங்கிய கர்நாடகா வனத் துறை, அதனை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வனப்பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டும் புலியைப் பிடிக்கும் பணிகள் துரிதப்படுப்பட்டுள்ளன.

பந்திப்பூர் புலிகள் காப்பக கள இயக்குநர் பாலச்சந்திரா தலைமையில் ஆறு கும்கி யானைகள், ஆறு மருத்துவக் குழுக்கள், வனத் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே அந்தப் பகுதியில் மூன்று புலிகள் உலா வருவதால் இதில் உயிர்களை வேட்டையாடிய புலியை அடையாளம் காணும் பணிகளில் கர்நாடக வனத் துறை ஈடுபட்டுள்ளது.

Intro:OotyBody:
உதகை 11-10-19

ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரம். உயிருடன் பிடிக்க வனத்துறை மும்முரம்.

பந்திப்பூர் பகுதியில் புலி தாக்கி இருவர் இறந்த நிலையில், அந்த பகுதியில் 3 புலிகள் இருப்பதால் ஆட்கொல்லி புலி எது என்பது என அடையாளம் காணும் பணிகளில் கர்நாடக வனத்துறை ஈடுபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், சவுடனஹள்ளி மற்றும் ஹண்டிபுரா பகுதியில் கடந்த 7ம் ேததி காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிவலிங்கப்பா(55) என்பவரை புலி தாக்கி கொன்றது. கடந்த ஒரு வாரத்தில் இந்தப் புலி 3 மாடுகளையும், கடந்த செப்டம்பர் மாதம் இதே பகுதியைச் சேர்ந்த சிவமாதய்யாவை தாக்கி கொன்றுள்ளது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மனிதர்கள் மற்றும் கால்நடைகளை கொன்று வரும் புலியை 48 மணி நேரத்திற்குள் உயிருடன் அல்லது சுட்டு பிடிக்க உத்தரவிடப்பட்டு கர்நாடகா வனத்துறை களத்தில் இறங்கியது. இதனை புலியை சுட்டு கொல்ல எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆட்கொல்லி புலியை சுட்டு கொல்லும் முடிவை மாற்றிய கர்நாடகா வனத்துறை, அதனை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இருப்பினும் சவுடனஹள்ளி மற்றும் ஹண்டிபுரா கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் கோபத்தில் இருப்பதால் வனத்துறையினருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வனப்பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் புலியை பிடிக்கும் பணிகள் துரிதப்படுப்பட்டுள்ளது. பந்திப்பூர்ப புலிகள் காப்பக கள இயக்குநர் பாலச்சந்திரா தலைமையில் 6 கும்கி யானைகள், 6 மருத்துவ குழுக்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே அந்த பகுதியில் 3 புலிகள் உலா வருவதால், இதில் ஆட்கொல்லி புலி எது என்பதில் அடையாளம் காணும் பணிகளில் கர்நாடகா வனத்துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இருவரை புலி கொன்றுள்ளதால், அந்த புலி ஆட்கொல்லி புலி என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் 3 புலிகள் உலா வருகின்றன. இதனால் அதில் எது ஆட்கொல்லி புலி என்பது குறித்து அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் ஆட்கொல்லி புலி பிடிக்கப்படும். பின்னர் அது பன்னார்கட்டா உயிரியல் பூங்கா அல்லது மைசூர் மிருககாட்சி சாலை கொண்டு செல்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும், என்றனர்.

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.