நீலகிரி: குன்னூர் அருகே ஆலோரை என்ற கிராமத்தில் 4 வயது சிறுமி ஸ்ரீ நிஷா வீட்டு வாசலில் சுற்றித்திரிந்த 6 அடி நீளம் கொண்ட பாம்மை வியாழக்கிழமை (ஜூன்2) சாதுரியமாகப் பிடித்து பொந்திற்குள் விட்டது தொடர்பாக காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியானது.
இது பொது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குன்னூர் வனத்துறையினர் அச்சிறுமி மற்றும் பெற்றோரை வன அலுவலகத்திற்கு அழைத்தார்.
தொடர்ந்து, ஸ்ரீ நிஷா மற்றும் அவரது தந்தை வர்மா ஆகியோருக்கு வன சரகர் சசிகுமார் விஷபாம்பு கடித்தால் நேரிடும் விளைவுகள் குறித்தும், சிறு பிள்ளைகள் செய்யும் போது இது போன்று பெற்றோர் ஊக்கவிக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: Swiggy ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் பணியிட மாற்றம்