நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் அருகே நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இட வசதிகள் மற்றும் பார்கிங் வசதி இல்லாததால் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்கு வழியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதனால் அங்கு புதிய நீதிமன்றம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பந்துமை, ஆரக்கம்பை, கோத்தகிரி சாலையில் உள்ள பட்டுபூச்சி வளர்ப்பு பண்ணை போன்ற பகுதிகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷா சாய் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட அமர்வு நீதிபதி, மகிளா நீதிமன்ற நீதிபதி, சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஷ்வரி, வட்டாச்சியர் கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாபு, உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
இதையும் படிங்க : டெல்லி திமுக விழாவில் மாயமான தமிழச்சி தங்கப்பாண்டியனின் செல்போன்