இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13ஆம் தேதியிலிருந்து கரோனா தொற்றானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, பெங்களூருவைச் சேர்ந்த இருவர் உள்ளனர்" என்றார்.
"நீலகிரியில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் நீலகிரியிலேயே தங்கி பணிபுரிய வேண்டும். தொடர்ந்து பர்லியாறு, குஞ்சபண்ணை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
போலியான இ-பாஸ் வைத்துக்கொண்டு மாவட்டத்திற்குள் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை அண்ணா பல்கலை விடுதியில் கரோனா சிகிச்சை? துணை ஆணையர் பதி
ல்