நீலகிரி: குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கரோனா அச்சம் காரணமாக அங்குள்ள அனைத்துப் பூங்காக்களும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஏப்ரல் - மே மாத கோடை சீசனுக்காக 3 லட்சத்து 6 ஆயிரம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் - மே மாத கோடை விழாவில் இந்த மலர் நாற்றுகள் பூத்துக்குலுங்கும் எனப் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவ படிப்பு ஆன்லைன் வழிமுறை