நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் குந்தா, அவலாஞ்சி, அப்பர்பவானி, எமரால்டு உள்ளிட்ட 12 அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குறிப்பாக 210 அடி கொண்ட அப்பர் பவானி அணையானது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டது.
அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி நீர் திறக்கப்படவுள்ளதால் அத்திக்கடவு, பில்லூர் போன்ற பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதையும் படிக்க: பவானிசாகர் அணையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!