நீலகிரி மாவட்டம் உதகை-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து தான் நீலகிரி மாவட்டம் முழுவதும் ஆவின் பால், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட் பால் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நெய், தயிர், வெண்ணெய் போன்ற பொருள்களைத் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பத் தேவையான அட்டைப்பெட்டி, ஐஸ்கிரீம் என அனைத்தும் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன.
அப்போது அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.
பின்னர் அட்டைப் பெட்டிகளை வெளியே எடுத்து வீசி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருட்டில் ஈடுபட்ட நகை கடை ஊழியர் கைது!