நீலகிரி மாவட்டம் முதுமலைக்குட்பட்ட தெப்பக்காடு வனச்சரகம், தொட்டகட்டி பிரிவு அருகில் பிறந்து 3 மாதமே ஆன குட்டி பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. நேற்று (டிச.21) நள்ளிரவு யானைகள் பிளிரும் சத்தம் கேட்டது. இதனால் இன்று (டிச.22) காலை அங்கு சென்று பார்த்தபோது குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின் வனத்துறையினர் மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார் யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்தனர். பின் யானையின் உடல் உறுப்புகளை ரசாயன பரிசோதனைக்காக சேகரித்துள்ளனர்.
இதையும் படிங்க: காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய திமிங்கல சுறா!